அரூர்: லக்ஷ்மி நாராயணா கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம்

65பார்த்தது
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றியம் அரியகுளம் பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை சுவாமி லட்சுமி நாராயணா திருக்கோவில் அமைந்துள்ளது. தினசரி சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று பிப்ரவரி 8 தை மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குலதெய்வ பக்தர்கள் பலர் ஏராளமாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி