தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக எல்லப்புடையாம்பட்டி ஆற்றில் இன்று (டிசம்பர் 22) வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வருவாய் துறையினர், காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.