தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி காலனி பகுதியைச் சேர்ந்த ரத்தினம் என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் இன்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது மேற்படி கிராமத்தில் சுமார் 37 ஆண்டுகளாக ரத்தினம் தகப்பனார் பெயர் தீத்து என்கிற தீர்த்தான் ஆகிய என்னுடைய பெயரில் உள்ள ஈச்சம்பாடி கிராம சர்வே எண் 201/10 201/7 பட்டா எண் 605 நிலத்தை இன்று வரை என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து வருகிறது தற்போது எனக்கு வயது 80 ஆவதால் என் பெயரில் உள்ள மேற்படி சர்வே என் உள்ள நிலத்தை என்னுடைய மகன் காளியப்பன் அவருடைய மகன் மற்றும் பேரன் கார்த்திக் என்பவர் பெயரை கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி செட்டில்மெண்ட் பத்திரம் செய்து கொடுத்து விட்டேன்.
நான் எனது பேரன் கார்த்திக் என்பவர் பெயரில் பத்திர பத்திர பதிவு செய்து கொடுத்தது பிடிக்காமல் மேற்படி கிராமத்தில் வசிக்கும் தமிழரசன் என்பவர் தன்னுடன் 10 அடியாட்களை அழைத்து வந்து வயதான என்னை பேசி கத்தி கொடுவாள் ஆகியவற்றை கொண்டு வந்து வெட்டி பெட்ரோல் ஊற்றி அடையாளம் தெரியாமல் கொன்று விடுவேன் என்று மிரட்டுகின்றார். எனவே அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து செய்து எங்கள் உயிர் உடமைக்கு பாதுகாப்பு வழங்கும்படி மிகவும் தாழ்மையோடு வேண்டுகிறேன் இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் ரத்தினம் குறிப்பிட்டுள்ளார்