அரூர்: அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

54பார்த்தது
அரூர்: அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதி, அரூர் வட்டம், கீரைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ. ஆ. ப. , நேற்று மாலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வருகை தந்தவர்களிடமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார் இதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருந்தக பிரிவை பார்வையிட்டு உரிய மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி