கம்பைநல்லூர் கோல்டன் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் இவர் ஒயரிங் வேலை செய்து வருகிறார் இவரது மகன் ரித்திக் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தான். இவன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிந்த நிலையில் நேற்று கார்த்திக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர் வீட்டில் தனியாக இருந்த போது வெளியே சென்றுள்ளான். மாலை ஆகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் தேடிச் சென்றனர். அப்போது அந்த பகுதியில் விவசாய கிணற்றின் அருகேயுள்ள மோட்டார் அறையில் ரித்திக்கின் துணிகள் இருந்துள்ளது. இதனால் அவன் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், நேற்று மாலை அரூர் தீயணைப்பு துறையினர் மற்றும் கம்பைநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர். கிணற்றில் இறங்கி சித்திக்கை தேடினர். சுமார் ஒரு மணி தேரம் போராடி ரித்திக்கை சடலமாக மீட்டனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவலர்கள் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். அதில் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.