கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் செய்வது தமிழகத்தில் வழக்கமான ஒரு நிகழ்வாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் மேல் பாட்ஷாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஐம்பொன் ஸ்ரீ பால குரு ஐய்ப்பன் திருக்கோவிலில் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஐயப்பனுக்கு 100, 50, 20, 10 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகள் மற்றும் 5, 2, 1 ரூபாய் நாணயங்களை கொண்ட சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான பண மாலையில் அலங்காரம் செய்து ஐயப்ப சுவாமியை அரூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.