ஆடுகளை திருடி விற்ற வாலிபர் கைது

73பார்த்தது
தர்மபுரி மாவட்டம், கம்பை நல்லுார் சுற்று வட்டார பகு தியில் கடந்த, 6 மாதங்களாக ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பாதிக் கப்பட்டவர்கள் கம்பைநல்லுார் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் ஆடு திருட்டில் ஈடுபட்டதாக, மாவட்டம், கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி தாலுகா சந்துார் அடுத்த தொப் படி குப்பத்தை சேர்ந்த சத்ரியன், 20, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சத்ரியன் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து ஆடுகளை திருடி, அதை போச்சம்பள்ளியில் தான் நடத்தி வரும் கடையில் வெட்டி கறி கிலோ, 550 ரூபாய்க்கு விற் பனை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி