பொய்யபட்டியில் வாகன விபத்து கூலி தொழிலாளி பலி

83பார்த்தது
பொய்யபட்டியில் வாகன விபத்து கூலி தொழிலாளி பலி
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொய்யபட்டி பகுதியை சேர்ந்த சேட்டுமணி, கூலி தொழிலாளி நேற்று மாலை வீட்டுக்குச் செல்லும் பொழுது பொய்யபட்டி சாலையில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார். இதனை அடுத்து அருகாமையில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பு குறித்து கோட்டப்பட்டி காவல்துறையினர் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி