தர்மபுரி:
அரசு கலைக் கல்லூரியில் 21-02-2024 புதன்கிழமை கலையரங்கில் விலங்கியல் துறை மன்ற விழா நடைபெற்றது.
விலங்கியல் துறை தலைவர் முனைவர் கே விஜயதேவன் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ. கண்ணன் தலைமை உரையாற்றினார். விழாவில் தகடூர் அதிகமான் வரலாற்றுச் சங்க செயலாளரும், தகடூர் புத்தக பேரவை தலைவருமான மருத்துவர் இரா. செந்தில் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாணவ மாணவர்களுக்கு படிப்பின் அவசியம்,
நன்னடத்தை, உள்ளிட்ட சமூக நீதி கருத்துக்களை சிறப்பாக எடுத்துரைத்தார்.
ஓவியப்போட்டி, கவிதை போட்டி, சிறுகதை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார் நிகழ்ச்சியயில் விலங்கியல் துறை தலைவர் முனைவர் கே விஜயதவன் மற்றும் பேராசிரியர்கள்,
கௌரவ விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜீவிதா நன்றியுரை நிகழ்த்தினார்.