இருசக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு

58பார்த்தது
தர்மபுரி வட்டத்துக்கு உட்பட்ட ராஜபேட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வி நேற்று மாலை இலக்கியம்பட்டி பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் தமிழ்ச் செல்வி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித் தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி