தமிழக மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுதில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 3500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 5 மணிக்கு 2000 கனஅடியாக குறைந்தது. இந்நிலையில் மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த அளவே உள்ளது.