தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், சுதாகர் இருவரும் டிராக்டரில் நேற்று இரவு மண் ஏற்றி வந்துள்ளனர். அப்பொழுது தொப்பூர் காவலர் குடியிருப்பு சாலையில் இருந்து எருமப்பட்டி செல்லும் வழியில் சென்றுள்ளனர். இந்த நிலையில் சந்திராநல்லூர் அருகே நள்ளிரவு ஒரு மணிக்கு ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளது. அப்பொழுது டிராக்டர் ஓட்டுநர்கள் கோவிந்தராஜன் சுதாகரும், டிராக்டருக்கு அடியில் சிக்கியுள்ளனர். இதில் டிராக்டரி இருந்த மண் இருவர் மீதும் கொட்டி மூடியதில், யண்ணில் புதைந்து டிராக்டர் ஓட்டுநர்கள் கோவிந்தராஜ் மற்றும் சுதாகர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து டிராக்டர் கவிழ்ந்து கிடைத்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, மண்ணில் புதையுண்டு கிடந்த கோவிந்தராஜ் மற்றும் சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தொப்பூர் அருகே மண் ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், டிராக்டருக்கடியில் சிக்கி 2 ஓட்டுநர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது