தர்மபுரி: டிராக்டர்- கார் மோதல்

4726பார்த்தது
சேலம் மாவட்டம் ஜோடுகுழி பகுதியில் இருந்து தர்மபுரி நோக்கி ஒரு ஆம்னி கார் புறப்பட்டது. இந்த கார் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சவுளுப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற டிராக்டர் டிரைவர் திடீரென பிரேக் பேட்டதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராதவிதமாக ஆம்னி கார் டிராக்டரின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில் ஆம்னி காரில் வந்த 2 பேர் படுகாயங்களுடன் சிக்கி தவித்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் உதவியோடு மீட்புக் குழுவினர் விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி