மாணவர்களுக்கு பரிசு வழங்கிய செங்குந்த மகாஜன சங்கத்தினர்

75பார்த்தது
செங்குந்த மகாஜன சங்கத்தின் குமாரசாமிப் பேட்டை கிளை சார்பில் 10- ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் விழா தர்மபுரி குமாரசாமிப் பேட்டை சந்தோஷ் தியேட்டர் அருகே நடைபெற்றது. விழாவுக்கு தர்மபுரி மாவட்ட சம்பந்த மகாஜன சங்க தலைவர் சந்தோஷ் சிவா தலைமை தாங்கினார். சங்க பொதுச் செயலாளர் சச்சிதானந்தம், சங்கப் பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 10- ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் கிளை சங்கத் தலைவர்கள் எம். கே. எஸ். சண்முகம், அன்பு சதாசிவம், செயலாளர்கள் சச்சிதானந்தம், வெங்கடாசலம், அறங்காவலர் குழு தலைவர் சேகரன், செங்குந்தர் இளைஞரணி மாநில நிர்வாகி முருகவேல் மற்றும் நிர்வாகிகள் ஊர் புறமுகர் வேலாயுதம், மோகன், சுந்தரம், சங்க நிர்வாகிகள் வி. பி. எஸ். மணி, சதீஷ், , விக்னேஷ், சரவணன், செல்வமணி மற்றும் முக்கிய பிரமுகர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி