தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக பிரத்தியேகமான சந்தை நடக்கிறது. நேற்று நடைபெற்ற வார சந்தையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் நாட்டுக் கோழிகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். சிறிய அளவிலான கோழிகள் 400 ரூபாய் முதல் பெரிய நாட்டுக் கோழிகள் 1500 ரூபாய் வரையில் விற்பனையானது நேற்று 4 லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.