நல்லம்பள்ளி ஒன்றியம் மானியதஅள்ளி ஊராட்சியில் கீழ்பூரிக்கல் கைலாசநாதர் திருக்கோவிலில் இன்று (ஜூலை 28) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் காலபைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு பால் தயிர் நெய் சந்தனம் திருநீறு போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் மற்றும் பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது. பக்தர்கள் கலந்து கொண்டு எள்தீபம், சாம்பல் பூசணி தீபம் ஏற்றி வழிபட்டனர்.