தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில்
மாற்றுதிறனாளிகளுக்கு 4-வது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் மற்றும் காலபந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் தர்மபுரியில் உள்ள மாவட்டவிளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளை
மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி கொடி அசைத்து தொடங்கி
வைத்தார். 35 கிலோ, 37
கிலோ, 38 கிலோ ஆகிய 3 எடைபிரிவுகளில் ஓட்டம் உள்ளிட்ட தடகள போட்டிகளும், கால்பந்து
போட்டிகளும் நடைபெற்றது.
இதில் மாநிலம் முழுவதிலும்
இருந்து 200-க்கும் மேற்பட்ட
மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன்விளையாடினர்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல்,
பெற்றோர் ஆசிரியர் கழக
தலைவர் தங்கமணி, தி. மு. க.
மாணவர் அணி அமைப்பாளர்பெரியண்ணன் தகவல் தொழில் பணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
கவுதம் ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து
கொண்டு போட்டிகளை
பார்வையிட்டனர். இந்த
போட்டிகளில் வெற்றி பெற்ற
மாற்றுத்திறனாளிகளுக்கு
பரிசு மற்றும் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டது. இதற்கான
ஏற்பாடுகளை சிறப்பு தலைவர் சாக்ரடீஸ், தலைவர் உமா மகேஸ்வரி, செயலாளர் ஜெயபூர்ணிமா, பொருளாளர் கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள்
செய்திருந்தனர்.