ஆடி வெள்ளி புத்துநாகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

56பார்த்தது
தர்மபுரி நகர பகுதிக்கு உட்பட்ட செந்தில் நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு புத்துநாகர் கோவில் இங்கு வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். தற்போது குறிப்பாக ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஓட்டி இன்று அதிகாலை முதலே சுற்று வட்டார பகுதியில் சேர்ந்த இளம் பெண்கள் மற்றும் திருமண பெண்கள் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, முட்டை ஆகியவற்றை வைத்து வழிபாடு செய்தனர். மேலும் கோயில் வழிபாடு செய்தால் திருமணம் ஆகாத இளம் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் திருமணமான பெண்கள் தாலிபாக்கியத்துடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கையாக கருதப்படுகிறது. இன்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் நிர்வாகம் சார்பில் இவர்களுக்கு மஞ்சள் குங்குமம், தாலி கயிறு, வளையல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி