சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

264பார்த்தது
தர்மபுரி அருகே முக்கல் நாயக்கன்பட்டி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவ விழா கொடி யேற்றத்துடன்தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சீதாதேவி பெண் அழைப் பும், சீர்வரிசை அழைப்பும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலை பூஜைகளும், சாமிக்கு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு சிறப்பு வழிபாடு களும், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக் தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி