பள்ளிக் கல்விதுறை தூய்மைப் பணியாளர்கள் ஆர்பாட்டம்

557பார்த்தது
பள்ளிக் கல்விதுறை தூய்மைப் பணியாளர்கள் ஆர்பாட்டம்
தர்மபுரி:
ஏஐடியூசி பள்ளிக் கல்வி துறை தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும்திரள் ஆர்பாட்டம் செய்தனர்.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுப்பு முன்னிலை வகித்தார். இந்ந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் எம். மாதேஸ்வரன், விதொச. மாநில செயலாளர் ஜெ. பிரதாபன், , ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே. மணி, மாவட்ட துணை தலைவர்கள் சுதர்சனன், முருகேசன், உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாவட்டத்தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் இரவிசந்திரன், மாதையன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்பாட்டத்தில் பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி,
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதம் 5-ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் நிலுவை ஊதியத்தை முமுமையாக. வழங்க. வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு வட்டார. வளர்ச்சி அலுவலகங்களில் ஜனவரி மாதம் வரை உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களை கல்வி துறையுடன் இணைத்து பள்ளிக் கல்வி துறை மூலம் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி