ரோட்டரி மிட்டவுன் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

73பார்த்தது
தர்மபுரி ரோட்டரி மிட்டவுன் சங்கத்தின் 2024 -25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தர்மபுரி ரோட்டரி அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் புதிய தலைவராக என். கணேஷ், செயலாளராக எம். அன்பழகன், பொருளாளராக எம். அசோக் குமார் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர். தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர் வேலாயுத ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டி. என். சி. மணிவண்ணன், மண்டல ஒருங்கிணைப்பாளர் டி. கண்ணன், துணை ஆளுநர் வி. சிவராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாகமருத்துவ சேவை புரியும் 5 டாக்டர்கள், சிறந்த விளையாட்டு வீரர், நகராட்சி துப்புரப் பணியாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப் பட்டனர். முன்னதாக தர்மபுரி நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் தர்மபுரி அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி