தர்மபுரி:
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் 84 ம் ஆண்டு விழா , கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா, மற்றும் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் தருமபுரியில் நடைபெற்றது.
மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். புவணா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இ. பி. புகழேந்தி சிறப்புரையாற்றினார்.
ஐக்கிய மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். காசியம்மாள், யுடியுசி மாவட்ட செயலாளர் த. மு. சண்முகம், ஒன்றிய செயலாளர் பி. காவேரி மாவட்டக்குழு உறுப்பினர்கள் யு. கோவிந்தசாமி, எஸ். எம். அம்மாசி, டி. மணி மாதர் சங்க வட்டசெயலாளர் சி. லட்சுமி ஆகியோர் பேசினர்.
உள்ளாட்சி அமைப்புகளில் பதவிவகிக்கும் நகராட்சி , பேரூராட்சி, ஊராட்சி பெண் தலைவர்கள் சுயமாக செயல்பட வழிவகுக்கவேண்டும். பெண்தலைவர்களின் கனவர்கள் உறவினர்களின் தலையீட்டை தடுத்து பெண்கள் சுதந்திரமாக செயல்பட மாவட்ட நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தாதது கண்டிக்க தக்கது. எனவே தேர்தல் முடிந்தவுடன் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும் போது சில தொண்டு நிறுவனங்கள் பணம் பறிக்கும் வேலையை செய்கிறது.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம செய்து வெற்றிபெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.