தர்மபுரி மாவட்டம், பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் செளகத்(20). தொழிலாளியான இவர், கடந்த 2022 நவம்பர் 16ம்தேதி, பள்ளிக்கு தனியாக சென்ற சிறுமியை தூக்கிச் சென்று, சோளக்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், பென் னாகரம் அனைத்து மக ளிர் காவல் நிலைய போலீ சார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சவுகத்தை கைது செய்தனர். தர்மபுரி போக்சோ நீதி மன்றத்தில், இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், நேற்று இறுதி விசாரணை நடந்தது. இதில், சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த வாலிபர் சவுகத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹25 - ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி சயத் பர்கத்துல்லா தீர்ப்பு வழங்கினார்.