ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்வஜித் சிங். இவரது மகள் ஜியா சிங்கா விஸ்வஜித்சிங், கடந்த 15 வருடங்களாக தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் குடும்பத்துடன் தங்கி, இங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இவரது மகள் ஜியா சிங்கா, அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த சில நாட்களாக ஜியா சிங்கா பள்ளிக்கு ஷூ அணிவதற்கு பதிலாக செருப்பு அணிந்து சென்றுள்ளார். இதனால் நேற்று, விஸ்வஜித் சிங் தனது மகளை கண்டித்து உள்ளார். பின்னர், அவர் பள்ளிக்குச் சென்று விட்டார். இன்று வீட்டில் தனியாக இருந்த ஜியா சிங்கா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்த தகவல் அறிந்த தர்மபுரி நகர காவலர்கள், சம்பவ இடத் துக்கு வந்து மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.