தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட பேரேரி புதூர், சூலக்குறிச்சி, சூரிய கடை, தேக்கல்பட்டி, பாறை வளவு, முள்ளிக்காடு, குண்டல்பட்டி, வெள்ளாளப்பட்டி, ஜல்லூத்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு சமூக சேவகர் தகடூர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளித்த பின்னர் ஊர் மக்கள் தெரிவித்த போது சித்தேரியில் ஏற்கனவே மது கடை உள்ளது அந்த மது கடையை எங்கள் ஊர் பகுதிக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தின கூலி செல்லும் பெண்களும் கீரைப்பட்டி அரூர் போன்ற பகுதிகளுக்கு வனப்பகுதியை கடந்து பேருந்துக்கு தினமும் சென்று வருகின்றனர்.
தற்போது சித்தேரியில் உள்ள அரசு மதுபான கடையை எங்கள் பகுதிக்கு மாற்றுவதாக உத்தேசித்துள்ளனர். அவ்வாறு அமைந்தால் எங்கள் கிராமத்தில் இருந்து செல்லும் பள்ளி கல்லூரி மற்றும் தின கூலிக்கு செல்லும் பெண்களுக்கு மது பிரியர்களால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது ஏற்கனவே கிராம மக்கள் தல சீமியா நோயால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஆண்கள் மதுவிற்கு செலவழிப்பதால் குடும்பப் பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவே எங்கள் பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு எங்கள் பகுதியில் மதுபான கடை அமைக்க கூடாது என ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம் என தெரிவித்தனர்.