தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கி. சாந்தி தலைமையில் நடைபெற்றது
இன்று செப்டம்பர் 30 நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 476 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி தெரிவித்தார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 13 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ. 29. 02 இலட்சம் மதிப்பில் பணியிடத்து விபத்து மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகைகான கசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.