இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் செல்போன் கட்டணங்கள JIO, AIRTEL நிறுவனங்கள் உயர்த்தியதால், லட்சக்கணக்கானோர் BSNL நெட்வொர்க்கிற்கு திரும்பினர். இந்நிலையில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பிஎஸ்என்எல் சைக்கிளில் சுமார் ஒன்றரை லட்சம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இருந்து வரும் நிலையில் தற்போது இந்த மாற்றத்தால் தினசரி சுமார் 2000 முதல் 5000 நபர்கள் பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் இதனால் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகாமையில் வாடிக்கையாளர்களை திரும்ப பெற JIO, AIRTEL நிறுவனங்கள் தங்களது சிம் ஸ்டால்களை, தர்மபுரி BSNL அலுவலகத்தின் எதிரே நிறுவியுள்ளது. JIO, AIRTEL நிறுவனங்கள் செல்போன் கட்டணங்களை குறைக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.