தர்மபுபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டம்

1017பார்த்தது
தர்மபுபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டம்
தர்மபுரி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் இன்று (19. 3. 24) தருமபுரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் இரா. சிசுபாலன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் அ. குமார் உடனடிக் கடமைகளை முன்வைத்தார். கூட்டத்தில்
18 வது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஒன்றிய பாஜக அரசு கடந்த பத்தாண்டுகளில் கடைபிடித்து வந்த மக்கள் விரோத கார்ப்பரேட் ஆதரவு - வகுப்புவாத நடவடிக்கைகள் காரணமாக நாடு கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்து விட்டன. தேர்தல் பத்திர ஊழலில் சிக்கிய பாஜக நாடு முழுவதும் அம்பலப்பட்டு நிற்கிறது. மறுபுறம் இந்தியா கூட்டணி வலுவுடன் முன்னேறி வருகிறது. தருமபுரி தொகுதியில் சாதி, மத வெறிச் சக்திகளையும், பாஜக - வுடன் இறுதிவரை கூட்டணியில் இருந்துவிட்டு தற்போது தேர்தலுக்காக தற்காலிகமாக விலகி நிற்கும் அதிமுக - வையும் வீழ்த்திட, திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வாக்குச்சாவடி வாரியாக தீவிரமாகக் களப்பணி ஆற்றுவது, திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி