தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மானியத அள்ளி ஊராட்சி கீழ் பூரிக்கல் கிராமத்தில் உள்ள 32 ஆடி உயர சிவன் திருத்தலத்தில் இன்று பிப்ரவரி 21 ஆம் தேதி மாலை ராகு காலத்தில் நந்தி தேவருக்கு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் வெள்ளக்கல், பூரிக்கல் தொப்பூர் ஜருகு, ஈசல்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.