அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் ஹேண்ட்பால் போட்டிகளில் சேலம் பெரியார் பல்கலைக்கழக அணிக்காக விளையாடி இந்திய அளவில் 2ஆம் இடம் பெற்ற சஞ்சய் அவர்களுக்கு தேசிய அளவிலே சான்றிதழையும்,
சேலம் பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறையால் வழங்கப்பட்ட படிவம் சான்றிதழையும், நேற்று தர்மபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் கண்ணன் மாணவனுக்கு வழங்கி கௌரவித்தார். மேலும் பெரியார் பல்கலைக்கழக உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் மற்றும் மகளிர் சதுரங்க போட்டிகள் கடந்த 03 ஆம் தேதி சேலம் வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
அதில் தர்மபுரி அரசு கல்லூரி மாணவி K. C. கவியரசி மூன்றாம் இடத்தையும் , மாணவர் பிரிவில் இயற்பியல் துறை சத்யன் 6ஆம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தகுதி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை கல்லூரி முதல்வர் அவர்கள் வழங்கி கௌரவித்தார். மேலும் தர்மபுரி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக 30-08-2024 அன்று தர்மபுரி விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.
அதில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வீரர் வீராங்கனைகள் சிறப்பான முறையில் பங்கேற்று சாதனை படைத்த வர்களுக்கான தகுதி சான்றிதழ், பதக்கம், கோப்பைகளை கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.