காரிமங்கலம் அடுத்த, கீழ் தும்பல அள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 64) என்பவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சர்க்கரை நோய், இருதய நோய், கல்லீரல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயிற்று வலி அதிகமாக இருப்பதாக கூறிய முதியவர் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.