தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் எச்சனஅள்ளி கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் தொகுதி மேப்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ. 7, 00, 000 இலட்சம் மதிப்பீட்டில் புதிய உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டது இதனை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் இன்று காலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில் உடன் பாமக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.