மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

55பார்த்தது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவஹருல்லா , தர்மபுரியில் கொலை செய்யப்பட்ட முகமது ஆசிக் வீட்டிற்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின் தர்மபுரி கலெக்டர் சாந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர்களை சந்தித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மபுரியில் ஆசிக் என்ற இளைஞரை உணவகத்தில் ஒரு வெறிபிடித்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அவரது குடும்பம், செல்வ செழிப்பான குடும்பம். மதத்தை, சாதியை தாண்டி இது ஒரு ஆணவ படுகொலையாக நடந்துள்ளது. இந்த படுகொலை விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு, தமிழ்நாட்டில் சில ஆணவ படுகொலைக்கு எதிராக வழக்குகள் வேகமாக நடத்தி முடிக்கப்பட்டு தண்டனை
வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கொலை செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை காவல்துறை எடுக்க வேண்டும். அதேபோல ஆசிக்குடிய குடும்பத்திர்க்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு இந்த கோரிக்கைகளை கணிவுடன் பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி