நல்லம்பள்ளியில் இரவில் கொட்டித் தீர்த்த கனமழை

62பார்த்தது
தமிழகத்தில் விரைவில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள சூழலில்
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் நல்லம்பள்ளி, கோவிலூர் லளிகம், பூதனஹள்ளி, நார்த்தம்பட்டி, சேஷம்பட்டி, கொட்டாவூர், வெள்ளக்கல், ஜருகு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது இரவு நேரத்தில் திடீரெனப் பொழிந்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது மேலும் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மின் நிறுத்தம் செய்யப்பட்டது திடீரென பொழிந்த மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி