தர்மபுரி மாவட்டம்
நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெறுகிறது. இன்று காலை கூடிய சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க குவிந்தனர். மேலும் தற்போது ஆடி மாதம் என்பதால் கோவில் திருவிழாக்கள் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் வரத்து அதிகரித்துள்ளது ஆடுகள் ரகம் மற்றும் அளவை பொறுத்து 3000 ரூபாய்க்கு துவங்கி 20000 ரூபாய் வரை விற்பனையானது இன்று ஓரே நாளில் 60 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.