விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டை மற்றும் பழைய தர்மபுரியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த நிலையில், தற்போது பழைய தருமபுரியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்திக்கு தேவையான ஒரு அடி முதல் 10 அடியில் வரையிலான விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகின்றனர். செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் ராஜ அலங்காரம், ருத்ரமூர்த்தி, கிரிக்கெட் வீரர் விநாயகர், பால விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ணங்கள் மற்றும் உருவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.