வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி

77பார்த்தது
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக நடமாடும் மற்றும் சாலையோர சிற்றுண்டி, பானிபூரி, துரித உணவு , கூழ் வண்டி , சில்லி சிக்கன், உள்ளிட்ட உணவு வணிகர்களுக்கான உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு தர்மபுரி கே. ஆர். கே சுந்தரமஹால் அரங்கில் நேற்று செப்டம்பர் 30 மாலை நடைபெற்றது.

தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் வரவேற்புடன், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி, அருண், திருப்பதி சரண் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ. பானுசுஜாதா, எம். பி. , பி. எஸ். , தலைமையில் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற பயிற்சி பார்ட்னர் நோ புட் வேஸ்ட் பயிற்றுனர் கோகிலம் நடமாடும் உணவு வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தன்சுத்தம் , சுற்றுப்புற சுத்தம் , பொருள் மேலாண்மை, பொருட்கள் வாங்குதல், இருப்பு வைத்தல், தயார் செய்தல், நான்கு விதமான பொருட்கள் கெடுவதற்கான சூழ்நிலைகள் தவிர்த்தல் குறித்து விளக்கினார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட நடமாடும் உணவு வணிகர்கள் இரு பிரிவுகளாக பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி