பேரணியாக சென்று மாநாட்டிற்கு ஆதரவு திரட்டிய விசிகவினர்

56பார்த்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் வரும் அக்டோபர் 2 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறுகிறது. அதனால் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்குவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தருமபுரியில் விசி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விறுவிறுப்பாக மாநாட்டிற்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில் இன்று தருமபுரி விசிக மையம் மாவட்டம் சார்பில் மாநாடு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மைய மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில், நடைபெற்றது. அப்போது பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஆறுமுக ஆச்சாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, நேதாஜி பை சாலை வழியாக சென்று மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே முடிவடைந்தது. பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் மாலை அணிவித்து வீர முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர். பின்னர் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து விளக்கி பேசினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி