தர்மபுரி:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 நூலகங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து மாணவ, மாணவிகள் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திடவும், போட்டித்தேர்வுகளில் பங்கேற்க தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையிலும் சுமார் 20 தலைப்பிலான பொது அறிவுப்புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 நூலகங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து மாணவ, மாணவிகள் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திடவும், போட்டித்தேர்வுகளில் பங்கேற்க தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையிலும் சுமார் 20 தலைப்பிலான பொது அறிவுப்புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று (18. 05. 2023) வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை நூலகம், அரூர் இந்தியன் ஜிப்ஸி நூலகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் செயல்படும் பாப்பாரப்பட்டி கஸ்தூர்பாகாந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி நூலகம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சித்தேரி கிராமப்புர ஊராட்சி நூலகம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கலசப்பாடி கிராமப்புர ஊராட்சி நூலகம் ஆகிய ஐந்து நூலகங்களுக்கும் மாணவ மாணவிகள் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திடவும், போட்டித்தேர்வுகளில் பங்கேற்க தங்களை தயார் படுத்திக்கொள்ளும் வகையிலும் மனோரமா இயர்புக் (தமிழ், ஆங்கிலம்), The Hindu Year Book-2023, Sura Year Book-2023, India 2022-Publication DIvision, Indian Polity, Quantiative Aptitude, Addone Spoken English, A Modern Apporoach Verbal & Non verbal, Indian Economy through Questions & Answers, English for competitive examination, IBPS Banking Exam Book, Banking Technology, Bank-A Guide for competitive exam, இன்றைய தமிழ் இலக்கணம், TRB-TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு, TBTET-TRB-B. Ed-D. T. Ed-தேர்வு, Students dictionary, தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன கால
இந்தியா உள்ளிட்ட 20 தலைப்பிலான பொது அறிவுப்புத்தகங்களை மாவட்ட ஆட்சியரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.