தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பொழுது அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 1கோடி ரூபாய் நிதியில் நவீன குளிர்சாதன பேருந்து நிறுத்தம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அந்த நவீன பேருந்து நிறுத்தத்தில் மறைந்த முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்கள் சிறியதாக வைத்தும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தன்னுடைய புகைப்படத்தை மட்டும் பெரிதாக வைத்து தன்னை அடையாள படுத்தி வருகிறார் என குற்றம் சாட்டி இன்று காலை நவீன பேருந்து நிறுத்தம் அருகே பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்த அய்யாவு என்ற முதியவர் தனி நபராக போக்குவரத்து மிகுந்த சாலையில் தனி நபராக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக தர்மபுரி நகர காவல்நிலைத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த போலிசார் அவரிடம பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இதேபோல இதே பிரச்சனைக்கு தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.