தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் நாள் அரசு விடுமுறை தினம் என்பதால், இன்றைய தினம் (30. 10. 2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி இஆப. , அவர்கள் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இஆப. , தலைமையேற்று, தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை வாசிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி யினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சேகர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.