இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, மூத்த தோழர் இரா. நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழா மற்றும் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் கே. டி. கே. தங்கமணி 23-ம் ஆண்டு நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழா தருமபுரி ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் முன்பு நேற்று (டிசம்பர் 26) மாலை தருமபுரி மாவட்டக் குழு சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ். கலைச் செல்வம் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். தேவராசன் கட்சி கொடி ஏற்றி வைத்தார். பின்னர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தோழர் கே. டி. கே. தங்கமணி அவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கா. சி. தமிழ்க்குமரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ். சின்னசாமி, எஸ். கமலாமூர்த்தி, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் கே. மணி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம். கோபால், புள்ளாறு, அல்லிமுத்து, அரூர் நகர செயலாளர் முருகன், வட்டார செயலாளர்கள் அரூர் சிற்றரசு, பாப்பாரப்பட்டி பெருமாள் நிர்வாகிகள் சுதர்சனன், சாமிநாதன், சிவன், சின்னராஜ், மனோகரன், கோவிந்தசாமி, நவீன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.