தர்மபுரி: தவெக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

78பார்த்தது
தர்மபுரியில் நேற்று அம்பேத்கர் பிறந்தநாள் விழா பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இந்த நிலையில், நேற்று மாலை தர்மபுரியில் அம்பேத்கர் பிறந்த விழாவை முன்னிட்டு தர்மபுரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் கோபி, மாவட்ட இணை செயலாளர் வீரமணி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் சத்யா வீரமணி, மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி, அப்துல், மூர்த்தி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், சார்பு பொறுப்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி