தர்மபுரி: முருகர் கோவிலில் வைகாசி விசாகம் சிறப்பு வழிபாடு

55பார்த்தது
இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்று வருகின்றன இதன் ஒரு பகுதியாக தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட குமாரசாமிபேட்டை முருகர் கோவிலில் வைகாசி விசாகம் முன்னிட்டு காலை முருகருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பஞ்சாமிர்தம் தேன் போன்ற பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து முருகருக்கு சிறப்பு அலங்கரித்து தங்க கவசம் அணிவித்து. முருகருக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி