தர்மபுரி: கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை&வழிபாடு

55பார்த்தது
தர்மபுரி குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ள சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு இன்று விடியற்காலை சிவசக்தி விநாயகருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் சந்தனம் விபூதி பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று அதைத்தொடர்ந்து சிவசித்தி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு பிறப்பையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் 2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் சாமி கோவில் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், எஸ். வி. ரோடு சுப்பிரமணியசாமி கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், குப்பா கவுண்டர் தெரு பூவாடைக்காரி அம்மன் கோவில், புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி