தர்மபுரி 4 ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சி சார்பில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் தினசரி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பத்தூர் திருவண்ணாமலை மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூர் பகுதியில் இருந்தும் பென்பட்டுக் கூடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜூன் 04 பல்வேறு பகுதிகளில் இருந்து 21 விவசாயிகள் 1191. 650 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ 625 ரூபாய்க்கும், சராசரியாக கிலோ 547 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக கிலோ 376 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் இன்று 6, 55, 576 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக அலுவலர் தெரிவித்துள்ளனர்.