தர்மபுரி: கால்நடைமருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட கோரிக்கை

51பார்த்தது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய கேள்வி நேரத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ் பி வெங்கடேஸ்வரன் பேசும் போது தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் தொகையை விட கால்நடைகள் எண்ணிக்கை அதிகம் கால்நடை விவசாயம் இங்கு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இலக்கியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை தலைமை மருத்துவமனை 24 மணி நேரமும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலக்கியம்பட்டி மருத்துவமனையில் துறை சார்ந்த அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து சாத்தியக்கூறு இருப்பின் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி