தர்மபுரி: காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

77பார்த்தது
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம் நடைபெற்று வருகிறது. நேற்று டிசம்பர் 25 நடைபெற்ற முகாமில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 60 புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு 60 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 9 மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி