தர்மபுரி மாவட்டம் நிர்வாகம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி, மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப பட உள்ளது.