தர்மபுரி: தமிழக வெற்றி கழகம் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு

75பார்த்தது
தர்மபுரி நகர மற்றும் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏ. ஜெட்டிஅள்ளியில் உள்ள ஆர். எஸ். மசூதியில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சிட்டி சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கோபி, மாவட்ட இணை செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நகர இணை செயலாளர் மாதவன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ரஞ்சித், குமார் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி